Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்தல பத்தல பாடலில் காணாமல் போன வார்த்தைகள்… தியேட்டரில் ஏமாந்த ரசிகர்கள்!

பத்தல பத்தல பாடலில் காணாமல் போன வார்த்தைகள்… தியேட்டரில் ஏமாந்த ரசிகர்கள்!
, வெள்ளி, 3 ஜூன் 2022 (14:15 IST)
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பத்தல.. பத்தல..” பாடலில் இடம்பெற்றிருந்த ‘ஒன்றியத்தின் தப்பாலே’ போன்ற அரசியல் வரிகள் படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்டு உள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக இந்த வரிகள் ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ளதாக கண்டனக்குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Goosebumps எண்ட்ரி…. சூர்யா கதாபாத்திரம் இதுதான் – விக்ரம் படத்தைக் கொண்டாடிய ரசிகர்கள்!