Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபிலனின் வரவேற்புக்கு ரங்கன் வாத்தியாரின் பதில்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (18:02 IST)
நடிகர் பசுபதி டிவிட்டரில் புதிதாக காலெடுத்து வைத்துள்ளதை ஆர்யா சார்பட்டா படத்தின் வசனத்தோடு இணைத்து கூறி வரவேற்று இருந்தார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி நடித்த படம் சார்பட்டா. இந்த படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில் அதில் பசுபதியை ஆர்யா சைக்கிளில் வைத்து அழைத்து செல்லும் காட்சி மீமாக ட்ரெண்டாகி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில்தான் நடிகர் பசுபதி ட்விட்டரில் இணைந்தார். அவரை வரவேற்று டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ஆர்யா “வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே.. பாக்ஸிங்க விட ரத்த பூமி. உன்னோட பேருல இங்க நெறயா பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான்தாண்டானு உள்ள வந்த பாத்தியா. உன் மன்சே மன்சு தான். வா வாத்தியாரே இந்த வேர்ல்டு உள்ள போலாம்” என அந்த சைக்கிள் மீமோடே பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வரவேற்பு டிவிட்டுக்கு பசுபதி ரங்கன் வாத்தியார் ஸ்டைலில் பதிலளித்துள்ளார். அந்த டிவீட்டில் ‘ஆமா கபிலா, பாக்ஸிங்கே உலகம்னு இருந்திட்டேன். பரம்பரைக்கு ஒன்னுன்னா மொத ஆளா வந்துருவேன்.  நான் உன் சைக்கிள் பின்னாடி உக்காந்துக்குறேன். என்ன எல்லா எடத்துக்கும் கூட்டிட்டு போ’ என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

மகாராஜா படம் பார்த்துட்டு என் மனைவி என்ன சொல்லப்போறாரோ தெரியல- நடிகர் சிங்கம் புலி!

சர்ச்சையைக் கிளப்பிய எம் எஸ் பாஸ்கரின் பேச்சு… ப்ளுசட்ட மாறன் போட்ட பதிவு!

ஒரே ஒரு அப்டேட்தான் கொடுப்பேன், எல்லாத்தையும் கேக்காதீங்க- விடாமுயற்சி குறித்து அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments