Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை பார்வதியின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய லாக்டவுன்!

Advertiesment
நடிகை பார்வதியின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய லாக்டவுன்!
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (07:13 IST)
நடிகை பார்வதி பூ, மரியான் ஆகிய படங்கள் மூலம் தமிழில் பிரபலமானவர். கேரளாவைச் சேர்ந்த இவர், அங்கும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி அவ்வப்போது கருத்து தெரிவிப்பார்.

அத்துடன் மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பிலும் பார்வதி முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கொரோனா ஊரடங்கினாள் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நடிகைகள் பார்வதி மேனன் சமூகவலைத்தளங்களில் முழு நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தனது நீண்டநாள் ஆசையான மூக்குத்தி குத்திக்கொள்ளும் வைபவத்தை இந்த லாக்டவுனில் தனது வீட்டிலேயே நடத்தியதாக பார்வதி தெரிவித்துள்ளார். மூக்குத்தி அணிந்த பின்னர் நானும் எனது தாயைப்போலவே இருப்பதை உணர்ந்தேன். அம்மா குட்டியைப்போல ஒரு அம்மிணிக்குட்டி” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை ! மாஸ்டர் பட நடிகை ஓபன் டாக் !