Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’இரவின் நிழல்’ ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட பார்த்திபன்!

Iravin Nizhal
, வெள்ளி, 24 ஜூன் 2022 (18:35 IST)
’இரவின் நிழல்’ ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட பார்த்திபன்!
பார்த்திபன் நடித்து இயக்கிய உலகசாதனை திரைப்படம் இரவின் நிழல் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூலை மாதம் ரிலீசாகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஜூலையில் ஏற்கனவே பல பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் நிலையில் அந்த படங்களுக்கு போட்டியாக இரவின் நிழல் படமும் களத்தில் குதிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
உலகிலேயே முதல்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் திரைப்படம் என்ற பெருமையை இரவின் நிழல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாய்பல்லவியின் ‘கார்கி’ படத்தை ரிலீஸ் செய்யும் சூர்யா-ஜோதிகா!