பறந்து போ மற்றும் 3BHK படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

vinoth
சனி, 5 ஜூலை 2025 (09:49 IST)
நேற்று வெளியான படங்களில் இயக்குனர் ராமின் பறந்து போ மற்றும் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவான ‘3BHK’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த படங்கள் முதல் நாளில் தமிழ்நாட்டளவில் சுமார் 40 லட்சம் மற்றும் 80 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளன.

பறந்து போ. இயக்குனர் ராமின் வழக்கமான சீரியஸ் படங்களில் இருந்து கொஞ்சம் விலகி, நகைச்சுவை அம்சம் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்காலப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அழுத்தம் மற்றும் அதிலிருந்து வெளியேறுவது குறித்த படமாக உருவாகியுள்ளது.

3BHK, நகர்ப்புற மத்திய தர வர்க்கத்தின் கனவுகளில் ஒன்றான சொந்தமான வீடு ஒன்றைக் கட்டும் போராட்டத்தைப் பற்றி சொல்லும் கதையாக உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த இரு படங்களுக்கும் ரிலீஸுக்கு முன்பே நேர்மறையான ஒரு எதிர்பார்ப்பு உருவானது. அதனால் அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3000 கோடி ரூபாய் சொத்தை வேண்டாம் என சொன்ன ஜேசி சான்… ஜாக்கி சான் பெருமிதம்!

திரையரங்கில் எடுபடாத ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நான் ஏன் காப்புரிமைக் கேட்பதில்லை… இசையமைப்பாளர் தேவா சொன்ன ‘குட்டி ஸ்டோரி’

விமர்சனங்கள்தான் என்னைக் கடுமையாக உழைக்க வைக்கின்றன… சாய் அப்யங்கர் பாசிட்டிவ் பேச்சு!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments