நடிகர் விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பரமசிவன் பாத்திமா' திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
விமலுடன் சேர்ந்து சாயாதேவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விமல் இப்படத்தில் பள்ளி ஆசிரியராக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர் ஒரு பாதிரியாராக நடித்துள்ளார். இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியுள்ளார். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்தின் கதையமைப்பு, ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய சமுதாய மக்களின் வாழ்க்கை, அவர்களுக்குள் எழும் மத மோதல்கள் மற்றும் அதன் விளைவுகளை பற்றியது என டிரெய்லரில் இருந்து தெரிகிறது.
இரண்டு நிமிடத்திற்கும் அதிகமாக நீளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள், மத ஒற்றுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.