Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆதித்யா வர்மா மோசமானவன்… ஆனால் அதுதான் சினிமா – நாயகி பனிதா சந்து பளீர் பேச்சு !

Advertiesment
ஆதித்யா வர்மா மோசமானவன்… ஆனால் அதுதான் சினிமா – நாயகி பனிதா சந்து பளீர் பேச்சு !
, புதன், 20 நவம்பர் 2019 (12:55 IST)
நிஜவாழ்வில் ஆதித்யா வர்மா போன்ற ஒருவனை நான் காதலிக்க விரும்பமாட்டேன் எனஅந்த படத்தின் நாயகி பனிதா சந்து தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக ஆதித்யா வர்மா வெளியாக இருக்கிறது. இந்த படம் இந்தியிலும் கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் வெற்றி பெற்றது. தெலுங்கு, இந்தி என இரு மொழிகளிலும் வெற்றி பெற்றாலும் விமர்சகர்கள் ’ஆணாதிக்க சிந்தனையுள்ள படம் என விமர்சனம் செய்துள்ளனர்.

இதையடுத்து தமிழ் பதிப்பு ஆதித்யா வர்மாவின் கதாநாயகி பனிதா சந்து சமீபத்தில் அளித்த நேர்காணலில்  ‘நான் ‘அர்ஜுன் ரெட்டி/கபீர் சிங்/ ஆதித்யா வர்மா கதாபாத்திரத்தை நியாயப்படுத்தப் போவதில்லை. அவன்  மோசமானவன், குறைகள் இருப்பவன். என் நிஜ வாழ்வில் இதுபோன்ற ஒரு நபரை நான் காதலிக்க விரும்ப மாட்டேன்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற காதல் நிஜ வாழ்வில் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் கதையை சொல்வதுதான் சினிமா. ஆனால் அந்த கதாநாயகனை நாங்கள் ரொமாண்டிசைஸ் செய்யவில்லை. ’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

.சூர்யாவுடன் இணைந்து நடிக்க மறுத்தாரா அனுஷ்கா?