Publish Date: Tue, 19 Nov 2019 (22:09 IST)
Updated Date: Tue, 19 Nov 2019 (22:10 IST)
சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை அனுஷ்கா செட்டி மீண்டும் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க மறுத்து விட்டதாக ஒரு வதந்தி கோலிவுட் திரையுலகில் மிக வேகமாக பரவி வருகிறது
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அவர் ஹரி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்
இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்ததாக கூறப்படுகின்றது
இதனை அடுத்து அனுஷ்காவை நேரில் சந்தித்த படக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் சம்பளம் ரூபாய் 15 கோடி கேட்டதாகவும் இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது
சூர்யாவுடன் நடிக்க விருப்பம் இல்லாததால் வேண்டுமென்றே அனுஷ்கா அதிக சம்பளம் கேட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. சூர்யா நடித்த சிங்கம் படத்திற்கு பின்னர்தான் அவருக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைத்த நிலையில் அதை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் அவர் சூர்யாவுடன் நடிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்து உள்ளது
மேலும் அனுஷ்கா தற்போது ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருவதாகவும் புதிய படங்களை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதாலும் அவர் நடிக்க மறுத்ததற்கு காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது