தமிழ் சினிமாவில் குடும்பக் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ஹிட் கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர் பாண்டிராஜ். அப்படி அவர் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.
ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் அவரது டெம்ப்ளேட்டில் இருந்தும் படுதோல்வி அடைந்தது. அந்த படத்தின் தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி மிகப்பெரிய வரவேற்புப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது “எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு 3 ஆண்டுகளாக நிதிச்சிக்கலை எதிர்கொண்டேன். லியோ, விக்ரம் மற்றும் ஜெயிலர் போன்ற ஆக்ஷன் கதைகள் மட்டுமே வெற்றி பெற்றதால் இனிமேல் குடும்பக் கதைகள் வெற்றி பெறாதோ என்று நினைத்து சினிமாவை விட்டே சென்றுவிடலாம் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.