தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தற்போது அவரின் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரம்யா மோகன் என்பவர் விஜய் சேதுபதி மேல் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில், “எனக்கு தெரிந்த ஒரு பெண்ணை விஜய் சேதுபதி தனது கேரவனில் பாலியல் ஆசைக்கு இணங்க ரூபாய் 2 லட்சம் கொடுத்தார். பிற பாலியல் விருப்பங்களுக்காக ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்தார். ஆனால் விஜய் சேதுபதி சமூக ஊடகங்களில் ஒரு புனிதர் போல் நடிக்கிறார். பல ஆண்டுகளாக அந்தப் பெண்ணை விஜய் சேதுபதி பயன்படுத்தினார். சமூக வலைதளங்களில் ஆண்கள் புனிதர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். போதைப்பொருளும், பாலியல் தொடர்புகளும் தான் நடிகர்களின் உண்மையான முகம்” என்றும் அவர் காட்டமாக பதிவிட்டிருந்தார். ஆனால் இந்த பதிவை உடனே நீக்கிய அந்த பெண் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்புக்காக அதை நீக்கியதாக விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி “என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்குக் கூட அது பொய் என்று தெரியும். இந்த அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. என் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அந்த பெண்ணைப் பற்றி அனைவரும் பேசவேண்டும் என்பதற்காக அவர் இப்படி செய்துள்ளார். இதனால் அவருக்கு சில நிமிடங்கள் புகழ் கிடைக்கும். அதை அவர் அனுபவித்துக் கொள்ளட்டும். இன்று ஒரு சமுகவலைதளக் கணக்கு இருந்தால் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் பேசலாம். இந்த குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.