Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சார்பட்டா 2 படத்துக்குக் கிடைத்த முதலீட்டாளர்… தயாராகும் பா ரஞ்சித்!

சார்பட்டா 2 படத்துக்குக் கிடைத்த முதலீட்டாளர்…  தயாராகும் பா ரஞ்சித்!

vinoth

, சனி, 8 ஜூன் 2024 (08:48 IST)
ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்போது பா ரஞ்சித் தங்கலான் படத்திலும், ஆர்யா தன்னுடைய வேறு சில படங்களிலும் நடித்து வருவதால் சார்பட்டா 2 திரைப்படம் பற்றி அடுத்தகட்ட நகர்வு எதுவும் நடக்கவில்லை. மேலும் படத்தைத் தயாரிக்க முதலீடு செய்ய வந்த முதலீட்டாளர்கள் பின் வாங்கிவிட்டதாலும் படம் தாமதம் ஆனதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது சார்பட்டா 2 படத்துக்கு புதிய முதலீட்டாளர்கள் கிடைத்துள்ளதாகவும், அதனால் விரைவில் சார்பட்டா 2 தொடங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. கூழாங்கல் என்ற படத்தை தயாரித்த ’Learn and teach productions’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முதலீடு செய்ய ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும், படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!