Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் இணையும் அட்டகத்தி கூட்டணி… பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் தினேஷ்!

மீண்டும் இணையும் அட்டகத்தி கூட்டணி… பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் தினேஷ்!

vinoth

, வெள்ளி, 22 மார்ச் 2024 (07:50 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பா ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பா.ரஞ்சித் அடுத்து ஒரு ஹிந்தி படம் இயக்கப்போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஜார்க்கண்ட் பழங்குடினரான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் தங்கலான் படத்தை முடித்ததும் ரஞ்சித் அடுத்து அட்டகத்தி தினேஷை வைத்து சிறிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் 45 நாட்களில் ஷூட்டிங் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுதா படம் ட்ராப்… ரவிக்குமார் இயக்கும் படத்தை தொடங்கும் சூர்யா!