நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது.இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனம் பெற்றது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்த படம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தைத் தயாரிக்கும் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இது சம்மந்தமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் “புறநானூறு படத்துக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. நான் சிறந்ததைக் கொடுக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த படம் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. விரைவில் படம் தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளனர். இதனால் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டதாக கருத்துகள் எழுந்துள்ளன.
இதையடுத்து  இப்போது சூர்யா அடுத்து இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.