Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தில் இணையும் பஹத் பாசில்!

Advertiesment
பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தில் இணையும் பஹத் பாசில்!

vinoth

, வியாழன், 12 டிசம்பர் 2024 (08:06 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில்  தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளாராம் . இந்நிலையில் தற்போது சமீபத்தைய இணைவாக இந்த படத்தில் பஹத் பாசில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் ரஞ்சித் கான்ஸ் திரைப்பட விழாவில் போஸ்டர் வெளியிட்ட ‘வேட்டுவம்’ படம் என சொல்லப்படுகிறது.  தங்கலான் படம் போல இதுவும் ஒரு மேஜிகல் ரியலிச பாணியிலான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடாமுயற்சி எஃபெக்ட்டா இருக்குமோ?… அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத் தலமாக அஜர்பைஜான்!