Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இன்னொரு திரைப்படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இன்னொரு திரைப்படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Mahendran

, திங்கள், 24 ஜூன் 2024 (18:15 IST)
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்திற்கு ‘பாட்டல் ராதா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் பா ரஞ்சித்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
 
ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ள இப்படத்தில் குருசோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் , ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மது பாட்டிலுக்குள் உள்ள சிம்மாசனத்தில் குரு சோமசுந்தரம் உட்கார்ந்து இருப்பது போன்றும் அவரது கையில் சரக்கு இருப்பது போன்றும் உள்ளது. 
 
மேலும் அந்த பாட்டிலின் கீழே கொத்தனார் கரண்டி, சிலேட்டில் வரையப்பட்ட குடும்பத்தின் புகைப்படம், மேலும் அடுப்புக்குள் நாய் உக்காந்திருப்பது போன்று உள்ளதை அடுத்து மதுவினால் ஏற்படும் தீமை குறித்து இந்த படத்தில் சொல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!