ஷூட்டிங் நடத்திய ஊருக்கு சாலை வசதி செய்து தந்த பா ரஞ்சித் படக்குழு!

vinoth
புதன், 17 செப்டம்பர் 2025 (16:34 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிந்தாலும் ரிலீஸாகாமல் தாமதமாகிக் கொண்டே சென்றது. இந்நிலையில் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ள இந்த படம் UA சான்றிதழ் பெற்றது. இதையடுத்து படம் செப்டம்பர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக் கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மலைவாழ் கிராமங்களில் படமாக்கியுள்ளனர். அந்த ஊர்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லாத நிலையில்  8 கிமீ தூரத்துக்கு தார் சாலை வசதி செய்து கொடுத்துள்ளார் பா ரஞ்சித். இது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிவுக்கு வந்தது 'ஹார்ட் பீட் - 2' .. மூன்றாம் பாகம் உண்டா?

பிக் பாஸ் 9: இந்த வாரம் சிறைக்குச் சென்ற போட்டியாளர்கள் யார் யார்?

லோகா ஓடிடி குறித்து அறிவித்த ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

புதுப்பேட்டை 2 பாதி முடிஞ்சது… ஆயிரத்தில் ஒருவன் 2…?- செல்வராகவன் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments