இயக்குனர் பா ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வேட்டுவம் என்ற படம் உருவாகி வருகிறது. இதில் தினேஷ் மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று சில வாரங்களுக்கு முன்னர் நாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் ஸ்டண்ட் கலைஞரான மோகன்ராஜ் ஒரு அபாயமான ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது தமிழ் சினிமவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்துப் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட மூன்று பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் பா ரஞ்சித் நேரில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனையின் பேரில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.