Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கங்கை அமரனுக்கு வயித்தெரிச்சலா?... ஜி வி பிரகாஷுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

Advertiesment
இளையராஜா

vinoth

, திங்கள், 19 மே 2025 (10:00 IST)
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் சில பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த கங்கை அமரன், "முடிந்தால் அந்த படத்தின் இசையமைப்பாளர், இளையராஜா போன்று மக்களை கவரும் இசையை கம்போஸ் செய்ய வேண்டியது தானே? எதற்காக இளையராஜா இசையை பயன்படுத்த வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். "ஏழு கோடி சம்பளம் வாங்குபவருக்கு, இது கூட போட தெரியாதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பி எல் தேனப்பன் இது சம்மந்தமாக கங்கை அமரனுக்கு பதில் அளித்துள்ளார். அதில் “ கங்கை அமரன் பேசியதை நான் கேட்டேன். அவருக்கு ஜி வி பிரகாஷ் மேல் என்ன கோபமென்று தெரியவில்லை.  அவர் 7 கோடி ரூபாய் வாங்குவதால் வயித்தெரிச்சலா என்று தெரியவில்லை.  ஜி வி பிரகாஷ் தன்னுடைய படங்கள் ரிலீஸுக்காகப் பலமுறை சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளார்.

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்தியது இயக்குனரின் விருப்பம். இளையராஜா இசையமைத்த பிதாமகன் படத்தில் எம் எஸ் வி அவர்களின் பாடலை சிம்ரன் நடனமாடும் காட்சிகளில் பயன்படுத்தி இருப்பார்கள். அதற்காக இளையராஜாவுக்கு வேலை தெரியாது என்று சொல்ல முடியுமா?” எனக் கேட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘கில்’ திரைப்படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரம்?