Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓவியா வெளியிட்ட புகைப்படம் : இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Advertiesment
ஓவியா வெளியிட்ட புகைப்படம் : இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
, புதன், 20 ஜூன் 2018 (16:16 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை நடிகை ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே, மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் கமல்ஹாசனின் ஒப்புக்கொண்டார். 
 
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய உடனேயே ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கிள்’ எனக்கூறி அவரின் ரசிகர்களை குளிர வைத்தார். நானும் ஓவியாவும் நட்புடன் பழகி வருகிறோம் என ஆரவ் தொடர்ந்து கூறி வருகிறார்.
webdunia

 
இந்நிலையில், ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்று ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதைக்கண்டு அவரின் ரசிகர்களில் பலர் அதிர்ச்சியடைந்தனர். வேண்டாம்.. ஆரவ் வேண்டாம்..என கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனாலும், பலர் ஓவியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இது ஒரு செல்பி புகைப்படம்தான். அவர்களுக்குள் என்ன உறவு என தெரியவில்லை. எனவே, ஏன் அவசரம்? என சிலரும், ஓவியாவின் முகத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை. அது காதல்தான் எனவும் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
 
மொத்தத்தில், இந்த புகைப்படத்தை வெளியிட்டு ஓவியா ஆர்மியில் ஒரு கலவரத்தை ஓவியா உருவாக்கிவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்ப்படம் 2.0 பார்த்த தயாரிப்பாளர் சோகம்