Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியான நடிகைகள்

Advertiesment
பிக்பாஸ் 2
, திங்கள், 18 ஜூன் 2018 (11:24 IST)
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 1 முடிவடைந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 2 நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. கடந்த சீசனில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக நடிகை ஓவியா மக்களின் ஆதரவைப்  பெற்றார். 
பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் பாகத்தைத் தொகுத்து வழங்கிய கமலே இதனையும் தொகுத்து வழங்குகிறார். நேற்று ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வீட்டுக்குள் போட்டியாளராக செல்கிறார். இதனை பார்த்த பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். முக்கியமாக பெண்  போட்டியாளர்கள் (நடிகைகள்) அதிர்ச்சியும், பயமும் கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஓவியா நானும் உங்களுடன் 100 நாட்கள் இந்த வீட்டில்  தங்கபோவதாக கூறுகிறார்.
ஓவியா தற்போது விருந்தினராக தான் வந்துள்ளார். ஆனால் இவை போட்டியாளர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பிக்பாஸ் 1  சீசனில் மக்களின் அமோக ஆரதவை பெற்று ஓவியா ஆர்மி உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களையெல்லாம் பார்த்த பாவமா இருக்கு - பிக்பாஸ் புரோமோ வீடியோ