ஆஸ்கருக்கு செல்லும் ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சென்சாரில் எழுந்த எதிர்ப்பு!

vinoth
சனி, 27 செப்டம்பர் 2025 (09:51 IST)
உலகளவில் சினிமாவுக்கு வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதாகக் கருதப்படுகிறது ஆஸ்கர். அது அமெரிக்காவில் உருவாகும் ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும் அதை உலகளவில் சினிமா ரசிகர்களும் திரைத்துறையினரும் உற்று கவனிக்கின்றனர். அதில் வெளிநாட்டு சினிமா என்ற ஒரே ஒரு பிரிவில் வேற்று நாட்டைச் சேர்ந்த படங்களுக்கு விருதளிக்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜான்வி கபூர், இஷான் கட்டர் மற்றும் விஷால் தேஜ்வா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த படம் வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்ற போது அதில் உள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு எழுந்து சான்றிதழ் வழங்கப்படவில்லை. பின்னர் மறிபரிசீலனைக் குழு படத்தைப் பார்த்து 11 இடங்களில் வெட்டுகளைக் கொடுத்து UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments