Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் ஆஸ்கர் விருது விழா....திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு

Advertiesment
அமெரிக்காவில் ஆஸ்கர் விருது விழா....திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு
, ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (10:52 IST)
அமெரிக்காவில் ஆஸ்கர் விருது விழா

உலகமே எதிர்ப்பார்த்துள்ள, இந்த ஆண்டுக்கான 92 வது ஆஸ்கர்  விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்  நகரில் நாளை காலை ( இந்திய நேரப்படி இன்று இரவு ) நடைபெறவுள்ளது. 
 
இந்த விருது விழாவில் உலகெங்கிலும் உள்ள ஏராளமான திரைஉலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
 
ஆஸ்கர் விருதுக்காக ஜோக்கர், பாராசைட், 1917 ஆகிய 9 படங்கள் பட்டியலில் உள்ளன.
 
சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஜோக்கர் படத்தில் நடித்த ஃபீனிக்ஸ், மற்றும் ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம்ஸ் இன் ஹாலிவுட் படத்தில் நடித்த பிராட் பிட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இயக்குநர்  பட்டியலில், போங் ஜூன் - ஹோ( பாராசைட் ), மார்டின்  ஸ்கார்சசி ( ஐரிஸ் மேன் ) உள்ளிட்டோர் விருது பட்டியலில் உள்ளனர்.
 
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறதா? ரசிகர்கள் குஷி