கோல்டன் க்ளோப் 2020: விருது வென்ற ஜோக்கர்! – முழு பட்டியல்!

திங்கள், 6 ஜனவரி 2020 (11:19 IST)
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு நிகராக போற்றப்படும் கோல்டன் க்ளோப் விருது பட்டியலில் இந்த ஆண்டு பல்வேறு முக்கியமான திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. சிறந்த நடிகருக்கான கோல்டன் க்ளோப் விருதை “ஜோக்கர்” பட நாயகன் ஜோக்கின் பீனிக்ஸ் தட்டி சென்றார். சிறந்த படத்திற்கான விருது 1917 என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் திரைப்பட மேதை மார்ட்டின் ஸ்கார்ஸசி இயக்கத்தில் வெளியான ஐரிஷ்மேன் திரைப்படம் விருது வாங்காதது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் சிறந்த திரைக்கதை மற்றும் மியூசிக்கல் பட வகையில் குவெண்டின் டொரண்டினோவின் “Once Upon A Time In Hollywood” விருதுகளை வென்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை கொரியன் படமான “பாரசைட்” பெற்றுள்ளது.

சிறந்த படம் (ட்ராமா) – 1917
சிறந்த நடிகை (ட்ராமா) – ரெனீ செல்வெகர், ஜூடி
சிறந்த நடிகர் (ட்ராமா) – ஜோக்கின் பீனிக்ஸ், ஜோக்கர்
சிறந்த திரைப்படம் – ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட்
சிறந்த இசை – ஹுல்டர் குனோடோடிர், ஜோக்கர்
சிறந்த திரைக்கதை - ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட்
சிறந்த டிவி தொடர் – செர்னோபில்
சிறந்த வெளிநாட்டு படம் – பாரசைட

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆப்ரேஷன் பண்ணிடீங்களா...? அடையாளமின்றி மாறிப்போன ஐஸ்வர்யா தத்தா!