Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஒரு விரல் புரட்சியின் மர்ம ரகசியம்' வைரலாகும் வீடியோ

சர்கார்
Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (19:51 IST)
விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சியான தமிழக அரசு கொடுத்த இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருட்களை எரிக்கும் காட்சி அதிமுகவினர்களின் போராட்டம் காரணமாக நீக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இதனையறிந்த விஜய் ரசிகர்கள் பலர் தங்கள் வீடுகளில் உள்ள தமிழக அரசு கொடுத்த இலவச பொருட்களை தீயில் போட்டும், ரோட்டில் உடைத்தும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த ஒருவிரல் புரட்சி தமிழகத்தின் பல பகுதிகளில் விஜய் ரசிகர்கள் செய்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஒரு விரல் புரட்சி குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வலம் வருகிறது. ஒரு விஜய் ரசிகர் இரண்டு மிக்ஸிகளை உடைப்பதற்காக கொண்டு வருகிறார். அப்போது இன்னொருவர் அந்த மிக்ஸியை வாங்கி பிரித்து பார்த்தபோது உள்ளே ஏதுவும் இல்லாமல் எம்ப்டியாக இருந்தது. உள்ளே உள்ள மோட்டார் உள்பட அனைத்து பொருட்களையும் விற்றுவிட்டு வெறும் மிக்ஸியை மட்டும் உடைத்து ஒருவிரல் புரட்சி செய்ததாக அந்த ரசிகர் கூறுவது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. ஒருவேளை விஜய் ரசிகர்கள் உடைத்த பொருட்கள் அனைத்தும் இப்படித்தான் இருந்திருக்குமோ? என்ற சந்தேகமும் எழுவதில் வியப்பில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments