Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோட் படத்தில் விஜயகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக வராததற்கு இதுதான் காரணம்… ஒளிப்பதிவாளர் பகிர்ந்த தகவல்!

கோட் படத்தில் விஜயகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக வராததற்கு இதுதான் காரணம்… ஒளிப்பதிவாளர் பகிர்ந்த தகவல்!

vinoth

, சனி, 14 செப்டம்பர் 2024 (07:40 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது. படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அஜித், ரஜினி, சூர்யா மற்றும் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் ரெஃப்ரன்ஸ்களை அமைத்திருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. அதுபோல சிவகார்த்திகேயன் மற்றும் த்ரிஷா போன்றோரின் கேமியோக்களும் ரசிகர்களை கவர்ந்தன.

இதில் உச்சபட்சமாக கோட் படத்தில் விஜயகாந்த் ஏ ஐ மூலமாக திரும்பக் கொண்டுவரப்பட்டது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிய சர்ப்ரைஸாக அமைந்தது. படம் பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்த்து மகிழ்ந்தார்கள். ஆனால் இந்த காட்சிகள் சரியாக உருவாக்கப்படவில்லை. பார்ப்பதற்கு அது விஜயகாந்த் போலவே இல்லை என்றும் விமர்சனங்கள் வந்தன.

இது குறித்து பேசியுள்ள படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி “படத்தில் இளவயது விஜய் சாரின் டி ஏஜிங் காட்சிகள் சிறப்பாக வந்தன. அதற்குக் காரணம் விஜய் சாரின் 3டி உருவத்தை நாங்கள் ஸ்கேன் செய்து வைத்திருந்தோம். ஆனால் விஜயகாந்த் சாரின் 3டி இமேஜ் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அவரின் படங்கள் மற்றும் புகைப்படங்களில் இருந்துதான் 2டி இமேஜ் எடுத்தோம். அதனால் அந்த காட்சிகள் இன்னும் சிறப்பாக வரமுடியாமல் போய்விட்டன” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரிய ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுத்தால் அது நல்ல படமாகிவிடாது- ஹெச் வினோத் கருத்து!