'பிகில்’ படத்தால் ‘தர்பார்’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை

Webdunia
ஞாயிறு, 5 ஜனவரி 2020 (17:16 IST)
விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி நல்ல வசூலை குவித்த நிலையில் இந்த படத்திற்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கில் பிகில் திரைப்படம் அதிகாலை காட்சி திரையிடவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து ரகளையில் ஈடுபட்டனர்
 
போலீஸ் நிலையம் மீது கற்களை வீசியும் சாலையில் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியும், அருகில் இருந்த கடைகளின் பேனர்களை கிழித்தும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனத்தின் மீது பட்டாசுகளை வீசியும் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட 30 விஜய் ரசிகர்களை கைது செய்ததாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் ‘பிகில்’ படத்தின்போது கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக வரும் 9ஆம் தேதி ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு அதிகாலை காட்சிக்கு கிருஷ்ணகிரியில் அனுமதி இல்லை’ என போலீசார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி ரஜினி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு புதுமுக இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த வாய்ப்பு… யார் இந்த போடி ராஜ்குமார்…?

இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

எந்த அப்டேட்டும் வேண்டாம் சார்… ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?

நடிகை சிம்ரன் வெளியிட்ட 'ரெட் லேபிள் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

காதலை நம்பாத ஒருவனின் மாற்றத்தை வெளிப்படுத்துவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது - நடிகர் கவின்

அடுத்த கட்டுரையில்
Show comments