பிகில் படத்தின் கலெக்ஷன் மிகப்பெரிய அளவில் வந்துள்ளதால் அதையடுத்து விஜய் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய் சமீபத்தில் நடித்த தெறி, மெர்சல், சர்க்கார் ஆகிய படங்கள் நல்ல வசூல் செய்து வருகின்றன. இதனால் ரஜினிக்கு அடுத்து விஜய்தான் அதிக வசூல் செய்யும் ஹீரோ என்ற நிலையை அடைந்துள்ளார். இதையடுத்து கடந்த தீபாவளிக்கு வெளியான அவரது பிகில் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அநியாய விலைக்கு டிக்கெட்கள் விற்கப்பட்டதால் ரசிகர்களின் பணத்தை சுரண்டி லாபம் பார்த்தனர்.
இதனால் பிகில் படத்தின் கலெக்ஷன் அதிகமானதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த விஜய் தனது சம்பளத்தை இப்போது கிடுகிடுவென உயர்த்த முடிவு செய்துள்ளாராம். அந்த சம்பளம் ரஜினியின் சம்பளத்துக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது என்பதுதான் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அந்த அளவு விஜய்க்கு சம்பளம் கொடுத்து படமெடுக்க மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமே முடியும் எனக் கூறப்படுகிறது. விஜய் சொல்லிய அந்த பெரியத் தொகையை ஒத்துக்கொண்டே சன்பிக்ஸர்ஸ் அவர்களது அடுத்த படத்துக்கு விஜய்யை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.