Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் கடைசி படத்தில் ரூ.250 கோடி சம்பளம்?

vijayy

Sinoj

, செவ்வாய், 19 மார்ச் 2024 (19:36 IST)
புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு வரியுடன் சேர்த்து ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, அமீர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். யுவன் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடக்கிறது. இதற்காக நேற்று விஜய்  கேரளாவுக்கு சென்றார். அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 
 இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு ஏஜிஎஸ் நிறுவனம் வரியுடன் சேர்த்து ரூ. 200 கோடி சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில்,  நடிகர் விஜய்யின் அடுத்த படம் அவரது கடைசி படம் என்பதால் அவரது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதால் அவரது கடைசி படம் அரசியல் மற்றும் பொதுமக்களுக்கான பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் உருவாகலாம் என கூறப்படுகிறது.
 
இப்படத்தை ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த டிவிடி தனய்யா இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இப்படத்தை இயக்க ஹெச்.வினோத், தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் உள்ளிட்ட 3 பேரிடம் கதை கேட்டதாகவும், இதில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு வரியுடன் சேர்த்து ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
 
இப்படத்திற்கு அடுத்து, விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. முக்கிய அறிவிப்பு..!