காக்கா முட்டை, தர்மதுரை படங்கள் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் இடமில்லை என்று கூறியுள்ளார்.
 
									
										
								
																	
	
	 
	ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர். வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு இடமில்லை என்று வருத்தத்தோடு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு மதிப்பே இல்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகள் முதலில் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஹிந்தி மற்றும் மலையாள சினிமாக்களில் அந்த மாநில நடிகைகள் நடிக்கிறார்கள். ஆனால் தமிழில் மட்டும்தான் தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகள் நடிப்பதில்லை.
 
									
										
			        							
								
																	
	 
	பாம்பே பெண்களுக்கு கிடைக்கிற மரியாதையை விட நமக்கு ஒருபடி குறைவாகத்தான் கிடைக்கும் என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.