Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை வரும் ஸ்ரீ ரெட்டி; பீதியில் கோலிவுட்

Advertiesment
சென்னை வரும் ஸ்ரீ ரெட்டி; பீதியில் கோலிவுட்
, திங்கள், 16 ஜூலை 2018 (17:16 IST)
சினிமா வாய்ப்பு தருவாதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றிவர்கள் மீது புகார் அளிக்க சென்னை வர இருப்பதாக தெரிவித்துள்ளார் சர்ச்சை நடிகை ஸ்ரீ  ரெட்டி.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திய தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் மீதும், தற்போது தமிழ் திரைப்பட பிரபலங்கள் மீதும் பாலியல் புகார் கூறி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சுந்தர்.சி  ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஸ்ரீரெட்டி, விரைவில் சென்னை வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர், "நான் சென்னை வருகிறேன். என்னை ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர இருக்கிறேன். தெலுங்கு திரைப்பட உலகில் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் எனக்கு படவாய்ப்புகள் கிடைக்கிறதோ இல்லையோ. அதைப் பற்றி நான் கவலைப்படைவில்லை.
 
ஆனால், மற்ற பெண்களுக்கு என் வாழ்க்கைப் பாடமாக இருக்க வேண்டும். அதேபோல், இனி வரும் பெண்களில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும்,  ஏமாற்றுக்காரர்கள் தங்களது ஏமாற்றுவேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் இவ்வாறு நான் செய்கிறேன்.சென்னை மக்களும், தமிழ்த்  திரையுலகினரும், எனது ஆதரவாளர்களும் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன். ஆனால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மீது எனக்கு நம்பிக்கையில்லை. பெண்களை அவர் தரக்குறைவாகப் பேசுகிறார். பதவியில் இருக்கும் அவர், இவ்வாறு நடந்து கொள்வது சரியானது இல்லை" இவ்வாறு அவர்  வீடியோவில் கூறியுள்ளார்.
 
சமீபத்தில் ஸ்ரீ ரெட்டி விவகாரம் தொடர்பாக டி.ராஜேந்தர் திரைப்படத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில  மோசமானவர்களும் உள்ளனர். பாலியல் புகார்  கூறுவது ஸ்ரீ ரெட்டியின் உரிமை. அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும. அவர்களிடம் வாய் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லாம் தலைவருக்காக... விஜய் சேதுபதி!