Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிய தொடக்கூடாது… அண்ணாத்த படக்குழுவினருக்கு கட்டுப்பாடு!

ரஜினிய தொடக்கூடாது… அண்ணாத்த படக்குழுவினருக்கு கட்டுப்பாடு!
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:27 IST)
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அங்கு ரஜினிக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனவாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் உடல்நிலையை முன்னிட்டும் கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதாலும் அவரை யாரும் தொடவோ தேவையில்லாமல் கிட்ட செல்லவே படக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கிய லெனின் பாரதி!