Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பு- ஹன்சிகாவின் படத்தை வெளியிட தடையில்லை- நீதிமன்றம்

சிம்பு- ஹன்சிகாவின்  படத்தை வெளியிட தடையில்லை- நீதிமன்றம்
, செவ்வாய், 15 ஜூன் 2021 (17:00 IST)
நடிகர் சிம்பு- ஹன்சிகா நடித்துள்ள மஹா என்ற படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம்  மஹா. இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கியுள்ளார். இப்படத்தை எட்செட்ரா எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகம்ன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படதில் தனது கதையை வைத்து  தனக்கே தெரியாமல் இப்படத்தை முடித்து இதை  ஓடிடியில் வெளியிட உள்ளதாகவும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஜமீல் வழக்கு தொடர்ந்திருருந்தார்.

மேலும், இப்படத்தில் தனக்கு ஊதியாக தர ஒப்புக்கொண்ட ரூ 24 லட்சத்தில் வெறும்  8 லட்சத்து 15 ஆயிரம்தான் தந்துள்ளனர். மீதிப்பணத்தை தர உத்தரவேண்டுமெனவும், இப்படத்தை  என்னை எடுக்க விடாமல் முடித்ததற்கான ரூ. 10 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடவேண்டுமென ஜமீல் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் ஜமீலுக்கு சம்பள பாக்கியில் ரூ.5 லட்சத்து 50அ ஆயிரம் வழங்கத் தயாராக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதை அடுத்து ஜமீல் அதை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது. எனவே இயக்குநர் சங்கத்தில் இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுத்துவருவதாக கூறாப்பட்டது. எனவே இப்படத்தை வெளியிட இடைக்கால தடைவிதிக்கக் கூறிய மனுவை தள்ளுபட்டி செய்து நீதிபதி ஜெயசந்திரன் உத்தர்விட்டார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 28 ஆம்தேதி தள்ளி வைத்து அன்று இரு தரப்பினரும் எழுத்து பூர்வமான வாதம் தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்யாண வீட்டில் Dance ஆடி ஜாலி பண்ணிய சாய் பல்லவி - புகைப்படங்கள்!