Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் இருந்து விலகினாரா நிவின் பாலி?

vinoth
புதன், 16 ஜூலை 2025 (11:45 IST)
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் கதைக்களம் 1960 களில் கடற்கரை மற்றும் கப்பல் பின்னணியில் நடப்பது போல உருவாக்கப்பட்டதால் முன்தயாரிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கு மார்ஷல் என்று தலைப்பு வைக்கப்பட்டு சில தினங்களுக்கு  முன்னர் முதல் லுக் போஸ்டர் வெளியானது.

இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க மலையாள நடிகரான நிவின் பாலியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கால்ஷீட் உள்ளிட்ட சில காரணங்களால் தற்போது இந்த படத்திலிருந்து நிவின் பாலி நடிக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேரில் பார்த்த மனிதர்களை வைத்துதான் தலைவன் தலைவி படத்தை எழுதினேன்… பாண்டிராஜ் பகிர்வு!

சரத்குமார், ஜீவா நடிப்பில் உருவாகும் ‘சூர்யவம்சம் 2’… இயக்குனர் விக்ரமன் இல்லையா?

கூலி படத்தில் பஹத் பாசில் நடிக்காதது ஏன்?... இயக்குனர் லோகேஷ் சொன்ன காரணம்!

மீண்டும் இணையும் epic நகைச்சுவைக் கூட்டணி… புதிய படம் அறிவிப்பு!

காதலருக்கு அன்பு முத்தம்!... நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கு நிச்சயதார்த்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments