லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய LCU உலகத்தில் இணைக்கும் விதமாக கதையை எழுதியுள்ளார் லோகேஷ். கடந்த ஆண்டே இந்த படம் அறிவிக்கப்பட்டு விட்டாலும் தற்போதுதான் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நிவின் பாலி மற்றும் மாதவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதே போல கதாநாயகிகளாக பிரியங்கா மோகன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இந்த படம் அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் ஷூட்டிங் தொடங்காமல் இருந்தது. ஆனால் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நிவின் பாலி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.