ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பார்முலா ரேஸ் காரை ஒட்டி தனது புதிய திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற சேலை உடுத்தி கலர்புல் கிளாமர் காட்டி கிக்கு ஏத்தியுள்ளார்.