Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“நான் திமிர் பிடித்தவளா?... “ நடிகை நித்யா மேனன் பதில்

Advertiesment
“நான் திமிர் பிடித்தவளா?... “ நடிகை நித்யா மேனன் பதில்
, திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (08:55 IST)
நடிகை நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றதோடு அவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகையாக இருந்தாலும் இயக்கத்தைப் பற்றியும் சினிமாவைப் பற்றியும் நல்ல அறிவு உள்ள நடிகை என பாராட்டப்படுபவர் . தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் பற்றி அவ்வப்போது சில வதந்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு சிறு இடைவெளிக்குப் பின் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது தன்னைப் பற்றி எழுந்துள்ள வதந்தி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள நித்யா மேனன் “சினிமாவில் என்னைப் பற்றி எல்லோரும் திமிர் பிடித்தவள் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. எனக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் எனக்கு எதிராக பொய்யைப் பரப்புகிறார்கள். என் வளர்ச்சியை பார்க்க முடியாதவர்கள் என்னைக் கீழிறக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். என்னுடன் பணியாற்றியவர்கள் யாரும் என்னோடு வேலை செய்வது கடினம் என்று கூறியதில்லை” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிரட்டும் கண்கள்… வித்தியாசமான மேக்கப்… நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!