Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்புவுக்கு ஹீரோயினாகும் அக்கட தேசத்து நடிகை… இதற்கு முன் நடித்த படம் என்ன தெரியுமா?

சிம்புவுக்கு ஹீரோயினாகும் அக்கட தேசத்து நடிகை… இதற்கு முன் நடித்த படம் என்ன தெரியுமா?
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (11:01 IST)
நடிகர் சிம்பு சுசீந்தரன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்குப் பிறகு அவர் மிஷ்கின், சேரன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். இந்நிலையில் இப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம்.

மாநாடு படத்துக்குப் பிறகு சிம்பு சுசீந்தரன் இயக்கத்தில்தான் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போதே சிம்புவின் படத்தின் வேலைகளை சுசீந்தரன் மும்முரமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் மாநாடு படத்துக்கு முன்னதாகவே இந்த படத்தில் நடிக்க உள்ளாராம் சிம்பு. இந்நிலையில் சுசீந்தரன் குறைந்த பட்ஜெட்டில் 30 நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
webdunia

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை தெலுங்கு சினிமாக்களில் கிளாமர் குயினாக வலம்வந்த நிதி அகர்வாலாம். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா டெஸ்ட்டுக்கு இவ்ளோ காசா? அதிர்ச்சியான அமலா பால்!