Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா கேடியா இருக்கே...?? முகக்கவசம் அணிந்தும் தொற்று பரவல்!

Advertiesment
கொரோனா கேடியா இருக்கே...?? முகக்கவசம் அணிந்தும் தொற்று பரவல்!
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (10:56 IST)
முகக்கவசம் அணிந்து இருந்தாலும் கொரோனா பரவுவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியாகியுள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 66,85,082 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,03,569 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 56,62,490 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,19,023 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் பல கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் அதி தீவிர தொற்று பரவல் (Super Spreading Event) அபாயம் ஏற்படவுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது செப்டம்பர் வரை சீராக இருந்த பரவல் எண்ணிக்கை தற்போது இரண்டாம் கட்ட அலையை போல அதிகரிக்க துவங்கியுள்ளது. இது அதிதீவிர பரவலாக மாறிவிடுமோ என்ற அச்சமும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
மேலும், முகக்கவசம் அணிந்து இருந்தாலும் கொரோனா பரவுவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஆம், முகக்கவசம் அணிந்திருந்த போதும் ஒரு மீட்டர் இடைவெளியில் இருப்போருக்கு 5 முதல் 10 சதவீதம் வரை கொரோனா தொற்று பரவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதுவும் உட்புற அரங்குகளில் 90% இதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் கைக்குள் அமைச்சர்கள்... ஆதரவாளர் நம்பி ஏமாறப்போகும் ஓபிஎஸ்?