Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் இருந்தபடியே விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நிஷா - கணேஷ் !

Advertiesment
வீட்டில் இருந்தபடியே விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நிஷா - கணேஷ் !
, சனி, 25 ஏப்ரல் 2020 (19:29 IST)
கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இதனைத் தொடர்ந்து  'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் .

தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை  நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது காதலித்து  திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு சமைரா என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தபடியே கணவன் - மனைவி இருவரும் இணைந்து சுத்தப்படுத்தும் பொருள் விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

வீட்டில் இருந்தபடியே எளிமையான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பர வீடியோ  நன்றாக இருக்கிறது. சமூக நலன் கருதி இந்த விளம்பரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. மேலும், இந்த வீடியோவில் சமூக இடைவெளி குறித்தும், கொரோனா வைரஸ்  தொற்றை தடுப்பது குறித்தும் இந்த தம்பதி பேசி விழிப்புணர்வு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரமான ரோஜாவே மலர் பவித்ராவின் அழகிய போட்டோஸ்!