Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

அம்மாவானார் அறந்தாங்கி நிஷா - அழகிய புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்!

Advertiesment
Aranthangi nisha
, திங்கள், 30 டிசம்பர் 2019 (12:54 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார்.
 
இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.  இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. அதையடுத்து சமீபத்தில் தான் இவருக்கு  இஸ்லாமிய முறைப்படி சீமந்தம் நடைபெற்றது. 
 
இந்நிலையில் தற்போது தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன் வெளியிட்டு குழந்தைக்கு "சஃபா ரியாஸ்" என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர் வாழ்த்து கூறி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தர்பார் அப்டேட்: ஆதித்ய அருணாசலம் ரிப்போர்ட்டிங் ஆன் Jan 9!!