Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் "நினைவெல்லாம் நீயடா" படத்தின் முதல் பாடல்!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (08:34 IST)
"மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்..." என்ற பாடலை கௌதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ்  வெளியிட்டனர்.


இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட "அருவா சண்ட" படங்களை இயக்கிய ஆதிராஜன்  கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி.  அந்த பாடல்களை ஆதிராஜன் மிகுந்த ரசனையுடன் படமாக்கி இருக்கிறார்.

பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது. பழனி பாரதியின் வார்த்தை ஜாலங்களில் கார்த்திக்கின் மயக்கும் குரலில் உருவான "மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்..." என்ற முதல் பாடல்  ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. பிரபல இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் செய்தனர்.

தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார்.

முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன்,ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments