Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்க் ஸ்மிதாவை பார்த்ததில் மகிழ்ச்சி- நடிகர் விஷால் ஓபன் டாக்

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (20:05 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  விஷால். இவர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று  வசூல் குவித்து வருகிறது.

இந்த நிலையில்,  மார்க் ஆண்டனி படம் வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.

இப்படத்தின் வெற்றி விழா இன்று நடந்து வரும் நிலையில், விழாவில் பேசிய நடிகர் விஷால்,  மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஆரம்பத்திற்கு காரணமான நடிகர் விஜய், காத்தி, டி.ஆர்.ராஜேந்தர் ஆகியோருக்கு என் நன்றி.. தடைகள் எனக்குப் பழகிவிட்டது. மார் ஆண்டனி படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இது நியாயமான வெற்றி; பகத்சிங், கஜினி முகமது ஆகியோர் எனக்குப் பிடித்தவர்கள், அவர்களைப் போல 16 வருடம் கழித்து வெற்றி பெற்றுள்ளேன். நீங்கள் கொடுக்கும் டிக்கெட் விலையில் ரூ.1 ஐ தமிழ் நாடு விவசாயிகளுக்கு செலவிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

மேலும்,  சாகுறதுக்குள்ள எப்படியாவது சில்க் ஸ்மிதாவை பார்த்துவிடலாம் என நினைத்தேன். அது இந்த படம் மூலம் நடந்துள்ளது. சில்க் ஸ்மிதா போல் இருக்கும் விஷ்ணு பிரியாவை தேடி பிடித்து இப்படத்தில் நடிக்க வைத்த படக்குழுவுக்கு நன்றி என்று  விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments