தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன் தாரா. இவர் தற்போது க தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து விஜய்சேதுபதி மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஒரு பேட்டியில் தகவல் தெரிவித்திருந்தார் நயன்தாரா. இதையடுத்து எப்போது திருமணம் என ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர்
.
இந்நிலையில் இன்று நயன் தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயாருடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.