Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் படம் 2 குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழ் படம் 2 குறித்த முக்கிய அறிவிப்பு!
, வெள்ளி, 8 ஜூன் 2018 (13:17 IST)
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தமிழ் 2. சிவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 
 
ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சதீஷ், மனோபாலா, சந்தான பாரதி, ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 
தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவாகியுள்ளது இந்த படம். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில், படத்தை குறித்த புது அறிவிப்பை வெளியிட்டுள்ளா படத்தின் இயக்குனர். அதாவது, படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே, விரைவில் படம் வெளியாகும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலா படத்திற்கு குறைந்த வசூல் - காரணம் இதுதானா?