உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த 2014 ஆம் ஆண்டும் பிரேசிலில் இப்போட்டி நடைபெற்றது. தர்போது நான்கு ஆண்டுகள் கழித்து ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷியாவில் நடக்கிறது. சுமார் 32 அணிகள் பங்கேற்கும் 64 போட்டிகளை கொண்ட இத்தொடர் ரஷியாவின் 11 முக்கிய நகரங்களில் நடக்கிறது.
உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் உலக கோப்பை, உலகை சுற்றி எடுத்து வரப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சுற்றுப்பயணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கியது.
இது ஆறு கண்டங்களில் சுமார் 50 நாடுகளில் சுமார் 1,43,000 கிமீ துாரம் பயணம் செய்து நேற்று ரஷியா வந்தடைந்தது. கடந்த 2014 போட்டியில், ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.