Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக் லைஃப் தோல்வி… ஓடிடி ரிலீஸில் எழுந்த சிக்கல்… என்ன செய்யப் போகிறார் கமல்ஹாசன்?

vinoth
புதன், 11 ஜூன் 2025 (08:41 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு நிலவியது.  ஆனால் படம் ரிலீஸான பின்னர் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வசூல் பெரிய அளவில் சரிந்துள்ளது.இந்திய அளவில் இந்த படம் இன்னும் 50 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ரிலீஸுக்கு முன்பாக இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 8 வாரங்களுக்குப் பிறகு ஸ்ட்ரீம் செய்வது என கமல்ஹாசன் ஒப்பந்தம் செய்து அதை வெளிப்படையாகவும் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது படத்தின் இந்த மோசமான தோல்வியால் நான்கு வாரங்களிலேயே படத்தை ரிலீஸ் செய்ய சம்மதம் தெரிவிக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் முன்பு பேசிய தொகையில் பெரும் தொகையைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதாம். இதனால் கமல்ஹாசன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டு மாதத்தில் 500 கோடி ரூபாய் வசூல்… மலையாள சினிமாவில் சாதனைப் படைத்த மோகன்லால்!

நான் விரைவில் சின்மயிக்குப் பாட வாய்ப்பளிப்பேன்… விஜய் ஆண்டனி உறுதி!

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments