Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரேக்கிங் பேட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

Advertiesment
பிரேக்கிங் பேட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

vinoth

, செவ்வாய், 28 ஜனவரி 2025 (08:34 IST)
2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் வெளியாகி பிரபலமான சீரிஸ் பிரேக்கிங் பேட். அதன் பின்னர் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு உலகம் முழுவதும் அந்த சீரிஸ் பிரபலமானது. தமிழ்நாட்டிலும் இந்த சீரிஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ளது. தமிழ் சினிமாவிலேயே பல இயக்குனர்கள் அந்த தொடருக்கு ரசிகர்களாக உள்ளனர்.

இந்த தொடர் முடிந்து 12 ஆண்டுகள் ஆனபின்னரும் இன்னமும் இந்த தொடருக்கான ரசிகர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதே போல நெட்பிளிக்ஸில் இந்த தொடரைப் பார்க்கும் புதிய பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு நெட்பிளிக்ஸில் இருந்து இந்த தொடர் நீக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த தொடருடனான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெந்து தணிந்தது காடு 2 கதை ரெடி… ஆனா சிம்புவுக்கு ஆர்வம் இல்லை – கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!