Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னை கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு ஜூலி கொடுத்த பதிலடி

Advertiesment
தன்னை கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு ஜூலி கொடுத்த பதிலடி
, வெள்ளி, 23 நவம்பர் 2018 (15:12 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல்  சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பளினி, படங்களில் ஹீரோயின் என பிஸியாகிவிட்டார். அவர்  உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரண கலாய்  கலாய்க்கிறார்கள்.

webdunia

 
ஜூலி இதற்கு எந்த எதிர்ப்பும் இதுவரையில் தெரிவித்தது கிடையாது. இந்நிலையில் எப்பொழுது பார்த்தாலும் தன்னை கிண்டல்  செய்பவர்களுக்கு ஜூலி ட்வீட் செய்துள்ளார். ஆனால் இந்த ட்வீட்டை பார்த்ததும், அதையும் கலாய்க்கத் துவங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.  காரணம் என்னவென்றால், ஜூலி அதில் நாம் எனக்காக வாழ்கிறேன், நான் என் பின்னால் பேசும் எதிர்மரை விஷயங்களை பற்றி  கவலைபடவில்லை ஏனென்றால் என் பின்னால் பேசுபவர்களுக்கு என்னை காயபடுத்த மட்டும் தான் என் வலிகல் அல்ல. இவ்வாறு ட்வீட்  செய்துள்ளார்.பின்னர் எழுத்துப்பிழை இருந்ததால் ட்வீட்டிய வேகத்தில் அதை நீக்கிவிட்டார். இந்த ட்வீட்டை பார்த்து, இதற்கும் கிண்டல்  செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செய்வதை துணிந்து " செய் " திரைவிமர்சனம்