Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹெலிகாப்டர்ல பறந்தா ஒன்னும் தெரியாது எடப்பாடியாரே!!! சீறும் கமல்ஹாசன்

Advertiesment
ஹெலிகாப்டர்ல பறந்தா ஒன்னும் தெரியாது எடப்பாடியாரே!!! சீறும் கமல்ஹாசன்
, வியாழன், 22 நவம்பர் 2018 (16:02 IST)
ஹெலிகாப்டரில் சென்றால் மக்களின் கவலைகள் தெரியாது என எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் வகையாக கமல்ஹாசன் டுவீட் போட்டுள்ளார்.
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி விமானம் மூலம் சென்றார். சில பகுதிகளை மட்டுமே பார்வையிட்ட அவர், மழையின் காரணமாக  சென்னைக்கு திரும்பினார். மக்களுக்கு பயந்தே அவர் தனது பயணத்தை பாதியில் நிறுத்திக்கொண்டார் என பலர் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என கேட்டுள்ளார். இவர் எடப்பாடியாரை தான் இப்படி கேட்டிருக்கிறார் என தெரிகிறது. கமல் மக்கள் நீதி மய்யம் சார்பில் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்து மோதி 7 பள்ளிக் குழந்தைகள் பலி!