ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.
பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் தற்போது எழுந்தன. ஆனாலும் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனர் நெல்சன்தான் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். அதையடுத்து தற்போது அந்த படத்தின் திரைக்கதை வேலைகளில் இயக்குனர் நெல்சன் மற்றும் அவரது குழுவினர் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நெல்சனின் திரைக்கதைக்கு சில ஆலோசனைகள் வழங்க கே எஸ் ரவிக்குமாரை படக்குழு அனுகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து முத்து, படையப்பா மற்றும் லிங்கா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்காக படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர்கள் அனைவரிடம் ஆகஸ்ட் முதல் அடுத்த 3 மாதத்துக்கு எப்போது அழைத்தாலும் நடிக்க வரவேண்டும் என்ற கண்டீஷனை போட்டுள்ளாராம் நெல்சன்.